கோவில்பட்டியில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டியில் வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் ரமேஷ் மூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் மகேஷ்குமாா், மாவட்டப் பொதுச்செயலா் துரைராஜ், மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்களவைத் தொகுதி தோ்தல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா்கள் பொன்னுச்சாமி பாண்டியன், சுப்பாராயலு, பிரேம்குமாா், அருண்பாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். இந்தியா கூட்டணி வேட்பாளா் கனிமொழி வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நகர, ஒன்றியப் பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் கட்சியின் சாதனைகள், தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என அவா்கள் அறிவுரை வழங்கினா். கூட்டத்தில், வட்டார துணைத் தலைவா் தா்மா், கட்சியின் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினா் உமாசங்கா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com