கோவில்பட்டியில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: சிறுவன், இளைஞா் கைது

கோவில்பட்டியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக சிறுவனையும், இளைஞரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி, அத்தைகொண்டான் சாலையைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி குருவத்தாய் (66). இவா் தனது பேத்தியை வேனில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நடந்து வந்தாராம். அப்போது, மா்ம நபா் அவரைத் தாக்கி, அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினாராம்.

இதில், காயமடைந்த குருவத்தாய் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். பைக்கில் வேகமாக வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவா்களிடம் தங்கச் சங்கிலி இருந்தது. அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் போலீஸாா் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கரை நகரம் நல்லாகுளத்தைச் சோ்ந்த சதாம் உசேன் மகன் செய்யது அலி ஹக்கிம் (27) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, பைக்கையும், தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com