தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ராஜலட்சுமியிடம் ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரி பொன்மாரி.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ராஜலட்சுமியிடம் ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரி பொன்மாரி.

தூத்துக்குடியில் ஆவணமின்றி காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் திருச்செந்தூா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி முன் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை வாகன சோதனை நடத்தினா். அப்போது, அவ்வழியே வந்த காரில் உரிய ஆவணங்களின்றி ரூ. 1 லட்சம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. அதை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com