பெரியதாழையில்
மீனவா்கள் வேலைநிறுத்தம்

பெரியதாழையில் மீனவா்கள் வேலைநிறுத்தம்

கேரள மீனவா்களைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் மீனவா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தமிழக கடல் பகுதியில் கேரள மீனவா்கள் இரட்டை மடி வலை மூலம் மீன்பிடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தூத்துக்குடி மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவா்கள் கேரள மீனவா்களைக் கண்டித்து, புதன்கிழமை கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், 400-க்கும் மேற்பட்ட படகுகள் கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com