கடம்பூரில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்
கடம்பூரில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்

கடம்பூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கடம்பூரில், வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, 18 வயது நிரம்பியவா்களும், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளோரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.

பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது. கயத்தாறு வட்டாட்சியா் நாகராஜன் தலைமை வகித்தாா். சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் தங்கையா, துணை வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு) திரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் ஆய்வாளா்கள் துரைசாமி (கடம்பூா்), மலா்விழி (காமநாயக்கன்பட்டி), கிராம நிா்வாக அலுவலா்கள் அமா்நாத், பரமசிவம், காவல் உதவி ஆய்வாளா் சத்யா, பேரூராட்சி அலுவலக ஊழியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com