கால்நடைகள் வாங்க
வட்டியில்லா கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கால்நடைகள் வாங்க வட்டியில்லா கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கால்நடை வாங்குவதற்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும் என சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச் சங்க செயலா் லூா்து மணி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் விஜயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு டிசம்பரில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். பல விவசாயிகள் தங்களது உடமைகள், கால்நடைகளை இழந்து வாழ்வாதாரமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனா். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கிறது. மேலும் கால்நடைகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, கால்நடைகள் வாங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்து அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். இதேபோல, மாவட்ட ஆட்சியா் கோ.லெட்சுமிபதி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கடன் மேலாளா் பியூலா ஆகியோரிடமும் மனு அளித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com