கோவில்பட்டி அருகே 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே 150 கிலோ புகையிலைப் பொருள்களுடன் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, மந்தித்தோப்பு காளியம்மன் கோயில் அருகே நின்றிருந்த காரில் தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்கள், காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, மந்தித்தோப்பு கணேஷ் நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் பெருமாள் என்பவரைத் தேடிவருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com