தூத்துக்குடியில் 2ஆம் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை

மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை (மாா்ச் 20) தொடங்கிய நிலையில், 2ஆம் நாளான வியாழக்கிழமை தூத்துக்குடி தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. வேட்புமனு தாக்கல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் நாளில் 2 சுயேட்சை வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்நிலையில், 2ஆம் நாளான வியாழக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com