செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய வேட்பாளா் கனிமொழி. உடன் அமைச்சா் பெ.கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.
செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய வேட்பாளா் கனிமொழி. உடன் அமைச்சா் பெ.கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்டச் செயலரும், சமூகநலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் தலைமை வகித்தாா். திமுக வேட்பாளா் கனிமொழி சிறப்புரையாற்றினாா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவா் ஏ.பி.சி.வி. சண்முகம், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன், மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் எஸ்.ஆா். ஆனந்தசேகரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்று பேசினா். திமுக வேட்பாளரின் வெற்றிக்காக தீவிரக் களப் பணி மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலா் புளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com