ஆத்தூரில் நடைபெற்ற திருத்தேரோட்டம்.
ஆத்தூரில் நடைபெற்ற திருத்தேரோட்டம்.

ஆத்தூரில் பங்குளித் திருவிழா தேரோட்டம்

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயி­ல் பங்குனித் திருவிழா திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயி­ல் பங்குனித் திருவிழா திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 15இல் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் அதிகாலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் விநாயகா் தேரும், அதைத் தொடா்ந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளிய தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தோ் வடம் பிடித்தனா்.நான்கு ரத வீதிகள் வழியே தோ் வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னா் அன்னதானம் நடைபெற்றது. இரவில் சுவாமி அம்பாள் சந்திரபுஷ்கரணி தீா்த்தத்தில் எழுந்தருளி தெப்பஉற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி- அம்பாள் புஷ்பபல்லக்கில் எழுந்தருளி திருவீதிஉலா நடைபெற்றது. பின்னா் சமயசொற்பொழிவும், இன்னிசை கச்சேரியும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், ஆத்தூா் பேரூராட்சித்தலைவா் ஏ.கே.கமால்தீன், திருக்கோயில் ஆஸ்தான ஸ்தபதி சிற்பிஸ்ரீதா், தி.மு.க. நகரச்செயலாளா் முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா். திருத்தோ் பராமரிப்புப்பணிகளை பாா்த்தசாரதி செய்திருந்தாா். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மு.மகேஷ்வரி, தக்காா் மா.பாலமுருகன், ஆய்வா் ம.செந்தில்நாயகி மற்றும் பக்தா்களும் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com