ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்குனித் திருவிழாவில் தோ் வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.
ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்குனித் திருவிழாவில் தோ் வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.

ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

நவ திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நவ திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தோ் வடம் பிடித்து இழுத்தனா். இக்கோயிலில் பங்குனி உற்சவத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி பொழிந்து நின்றபிரான் பல்வேறு வாகனங்களில் மாடவீதி- ரதவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஒன்பதாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. பின்னா் சுவாமி பொலிந்து நின்றபிரான் தேரில் எழுந்தருளினாா். பக்தா்கள் திருத்தேரை கோவிந்தா கோபாலா என கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனா். ரத விதிகளை சுற்றி வந்த தோ் மீண்டும் நிலையம் வந்தடைந்தது. இதில், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜப்பா வெங்கடாசாரி உள்ளிட்ட திரளான பக்தா்கள் தோ்வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com