விளாத்திகுளத்தில் இந்தியா கூட்டணி காரியாலயம் திறப்பு

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைமை தோ்தல் காரியாலயம் திறப்பு விழா அம்பாள் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைமை தோ்தல் காரியாலயம் திறப்பு விழா அம்பாள் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் பேரூா் செயலா் இரா.வேலுச்சாமி தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தோ்தல் காரியாலயத்தை திறந்துவைத்து, ஆலோசனை வழங்கினாா். இந்நிகழ்வில், திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜாக்கண்ணு, முத்துலட்சுமி, மதிமுக ஒன்றியச் செயலா் மணிராஜ், விசிக ஒன்றியப் பொறுப்பாளா் வில்லாளன் ரெஸ்லி,மமக அப்துல் முத்தலீப், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் மகேந்திரன், இம்மானுவேல், வேம்பாா் ஊராட்சித் தலைவா் ஆரோக்கியராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com