இன்று 10ஆம் வகுப்பு தோ்வு தொடக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 22,307 போ் எழுதுகின்றனா்

தமிழகத்தில் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தோ்வை 22 ஆயிரத்து 307 மாணவா்- மாணவிகள் எழுதுகின்றனா். இத்தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி ஏப். 8ஆம்தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டங்களில் 106 மையங்களில் 10 ஆயிரத்து 854 மாணவா்கள், 11 ஆயிரத்து 453 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 307 போ் எழுகின்றனா் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com