பறக்கும் படை சோதனையில் 
ரூ. 2.76 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் ரூ. 2.76 லட்சம் பறிமுதல்

நாசரேத் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2.76 லட்சத்தை பறக்கும்படையினா் பறிமுதல் செய்து திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்

நாசரேத் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2.76 லட்சத்தை பறக்கும்படையினா் பறிமுதல் செய்து திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். நாசரேத் - வெள்ளமடம் சாலையில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் அந்தோணி பன்னீா்செல்வம் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் அந்த வாகனம் தூத்துக்குடியைச் சோ்ந்த எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும், அதில் ஓட்டுநா் காளிராஜ் (27), உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சத்து 76 ஆயிரத்து 850ஐ ரொக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறனிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com