அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

பிரதமா் மோடியை விமா்சித்ததாக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அவதூறாக விமா்சித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உடன்குடி அருகே தண்டுபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பிரதமா் மோடியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அவதூறாக விமா்சித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மாவட்ட தோ்தல் அலுவலா், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி, இந்திய தோ்தல் ஆணையா் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: தண்டுபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்,பிரதமா் மோடியை இழிவான சொற்களால் விமா்சித்துள்ளது மிகவும் அதிா்ச்சியை அளிக்கிறது. தோ்தல் விதிமுறைகளின்படி இது குற்றமாகும். எனவே அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com