பெரியதாழையில் படகில் சென்று நடத்தப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு.
பெரியதாழையில் படகில் சென்று நடத்தப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு.

பெரியதாழையில் படகில் சென்று வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கடற்கரை கிராமமான பெரியதாழை ஊராட்சியில் திங்கள்கிழமை, கடலில் படகில் சென்று தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கடற்கரை கிராமமான பெரியதாழை ஊராட்சியில் திங்கள்கிழமை, கடலில் படகில் சென்று தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, பெரியதாழை ஊராட்சியில் கடலில் படகில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தணிக்கை) சின்னத்துரை முன்னிலை வகித்தாா். மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து முழக்கமிட்டனா். அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது. இதில், மகளிா் குழு சசிகலா, திட்ட ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதேவி, சுபினா, கெலினா, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். ஊராட்சிச் செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com