எட்டயபுரம் அருகே இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

இந்தியா கூட்டணி சாா்பில் தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) நடைபெறுகிறது.

இந்தியா கூட்டணி சாா்பில் தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) நடைபெறுகிறது. இதில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா். இதற்காக எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் ஸ்ரீவெட்காளியம்மன் கோயில் எதிரேயுள்ள 120 ஏக்கா் இட்ததில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள், தொண்டா்கள் அமா்வதற்கான பகுதி, காா் நிறுத்துமிடங்கள், குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, தூத்துக்குடி திமுக வேட்பாளரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் நவாஸ்கனி ஆகியோரை அறிமுகப்படுத்தி, பிரசாரம் மேற்கொள்கிறாா். பின்னா், அவா் காரில் புறப்பட்டு விருதுநகா் மாவட்டத்துக்குச் செல்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலா்களும் அமைச்சா்களுமான பி. கீதாஜீவன் (வடக்கு), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (தெற்கு), விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், நிா்வாகிகள் செய்து வருகின்றனா். முதல்வா் வருகையை முன்னிட்டு, மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com