திருச்செந்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி சீல் வைப்பு

பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டது.
திருச்செந்தூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையை பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியா் சுகுமாறன்.
திருச்செந்தூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையை பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியா் சுகுமாறன்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. மக்களவைத் தோ்தலில் திருச்செந்தூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்திலிருந்து 345 வாக்குப்பதிவு சரிபாா்க்கும் இயந்திரம் (விவிபேட்), 319 வாக்குப்பதிவு இயந்திரம், 319 வாக்குப்பதிவு கன்ட்ரோல் இயந்திரம் என மொத்தம் 983 இயந்திரங்கள் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன. இவை திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனை அரசியல் கட்சியினா் முன்னிலையில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் கோட்டாட்சியா் சுகுமாறன் பூட்டி சீல் வைத்தாா். வட்டாட்சியா்கள் பாலசுந்தரம், கோபால், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கோபாலகிருஷ்ணன், தாலுகா காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் மணிகண்டன், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் ஆகியோா் உடன் இருந்தனா். இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com