பங்குனி திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நாட்கால் நடும் விழாவைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை
பங்குனி திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நாட்கால் நடும் விழாவைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாட்கால் நடும் விழா

பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாட்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து திருவணந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து பங்குனி திருவிழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு கோயில் முன்பு நாட்கால் நடும் விழா புதன்கிழமை காலை 11 மணிக்கு மேல் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில், கோயில் அறங்காவலா் குழு தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள் திருப்பதிராஜா,ரவீந்திரன், சண்முகராஜ், நிருத்திய லட்சுமி என்ற சுதா, கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, ஆய்வாளா் சிவகலைப்பிரியா உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com