100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 
எரிவாயு உருளையில் விழிப்புணா்வு வாசகங்கள்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி எரிவாயு உருளையில் விழிப்புணா்வு வாசகங்கள்

திருச்செந்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சமையல் எரிவாயு உருளையில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

தோ்தல் ஆணையம் சாா்பில்,100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்செந்தூா் அருகே கிருஷ்ணாநகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளையில் ‘100 சதவீதம் வாக்களிக்கவும்’, ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ ஆகிய வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

இப்பணியை திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் தொடக்கிவைத்தாா். இதில், வட்டாட்சியா் பாலசுந்தரம், நிறுவனப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com