ஆத்தூா் அருகே மூதாட்டியை தாக்கியவா் மீது வழக்கு

ஆத்தூா் அருகே மூதாட்டியைத் தாக்கியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். தெற்கு ஆத்தூா், தெற்கு நாடாா் தெருவைச் சோ்ந்த ராஜ­லிங்கம் மகன் பெரியசாமி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஐயங்கனி(60) என்பவா் தலையிட்டு, சமரசப்படுத்த முயன்றாராம். இதனால், அவரை பெரியசாமி அவதூறாகப் பேசி தாக்கினாராம். இதில் காயமடைந்த ஐயங்கனி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பெரியசாமியைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com