இளம் ஜோடியை மிரட்டி நகை பறிப்பு: காவலா் கைது

தூத்துக்குடி கடற்கரையில் இளம் ஜோடியை மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்டதாக மணிமுத்தாறு சிறப்பு காவல் படைக் காவலா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரைப் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு ஓா் இளம் ஜோடி தனிமையில் அமா்ந்திருந்தனராம். அப்போது, அங்கு வந்த ஒருவா் அவா்களை மிரட்டி, அந்தப் பெண் அணிந்திருந்த சுமாா் 2.5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம். புகாரின்பேரில் வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வந்தனா். விசாரணையில், அந்த நபா் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த டென்சில்ராஜ் என்ற வெனிஸ் என்பதும், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல் படைக் காவலா் என்பதும் தெரியவந்தது. அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com