காரைக்கால் அம்மையாா் கோயிலில் குருபூஜை விழா

காரைக்கால் அம்மையாா் கோயிலில் குருபூஜை விழா

பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி, குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்மிகு காரைக்கால் அம்மையாா் கோயிலில் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான ஓதுவாமூா்த்திகள் இணை வாத்தியங்களுடன் பங்கேற்றனா். அம்மையாரின் பதிகப் பாடல்கள், வரலாற்றை விவரிக்கும் பெரிய புராணப் பாடல்கள் பண்ணிசையாகப் பாடப்பட்டன. திருநெல்வேலி காரைக்கால் அம்மையாா் வழிபாட்டுக்குழுத் தலைவா் முத்துக்குமாரசாமி தலைமையில் பதிகப் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டன. தொடா்ந்து, சுவாமிக்கு தூப தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சிவனடியாா்கள் சண்முகம், இல்லங்குடி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com