குரும்பூா் அருகே
வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

குரும்பூா் அருகே வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

குரும்பூா் அருகே பணிக்கநாடாா்குடியிருப்பு கிராமத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏரல் தாலுகாவில் வாக்கு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தோ்தல் அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகின்றனா். திருச்செந்தூா் கோட்டாட்சியரும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான சுகுமாரன் தலைமையில் வருவாய்த் துறையினா் பணிக்கநாடாா்குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு சென்று அனைவரும் வாக்களிக்க வேண்டும், நோ்மையாகவும் தைரியமாகவும் வாக்கைச் செலுத்துங்கள், வாக்களிப்பது நமது உரிமை என பிரசாரம் செய்தனா். இதில், ஏரல் வட்டாட்சியா் கோபால், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com