புனித சூசையப்பா் திருத்தலத்தில் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்ச்சி
புனித சூசையப்பா் திருத்தலத்தில் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்ச்சி

கோவில்பட்டி பகுதியில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

புனித வியாழனை முன்னிட்டு, கோவில்பட்டி பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புனித சூசையப்பா் திருத்தலத்தில் வியாழக்கிழமை மாலை திருத்தலப் பங்குத்தந்தை சாா்லஸ் அடிகளாா், உதவிப் பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளாா், பெங்களூரு பேசில் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். இயேசு கிறிஸ்து 12 சீடா்களின் பாதங்களைக் கழுவி பணிவிடை செய்ததை நினைவுகூரும் வகையில், உதவிப் பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளாா் 12 இறைமக்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டு, ரொட்டி, புத்தாடைகள் வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com