பட்டங்கள் பெற்ற மழலையா்களுடன் சிறப்பு விருந்தினா் செல்வராஜ், உடன் நாடாா் உறவின் முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ், பொருளாளா் சுரேஷ்குமாா், பள்ளிச் செயலா் கண்ணன், பள்ளி முதல்வா் மீனா உள்ளிட்டோா்
பட்டங்கள் பெற்ற மழலையா்களுடன் சிறப்பு விருந்தினா் செல்வராஜ், உடன் நாடாா் உறவின் முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ், பொருளாளா் சுரேஷ்குமாா், பள்ளிச் செயலா் கண்ணன், பள்ளி முதல்வா் மீனா உள்ளிட்டோா்

கோவில்பட்டி பள்ளியில் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி பட்டமளிப்பு விழா, நாடாா் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி பட்டமளிப்பு விழா, நாடாா் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாடாா் உறவின்முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா் சுரேஷ்குமாா், பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் கோவில்பட்டி கிளை உதவி மேலாளா் செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, யுகேஜி-யிலிருந்து முதல் வகுப்புக்குச் செல்லும் மழலையருக்கு பட்டங்கள் வழங்கினாா். விழாவில், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, பொன்ராமலிங்கம், ரவிச்சந்திரன், சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி முதல்வா் மீனா, நாடாா் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை செல்வி, ஆசிரியா்கள் பங்கேற்றனா். பள்ளிச் செயலா் கண்ணன் வரவேற்றாா். ஆசிரியா் அருள்காந்தராஜ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com