திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸை ஆதரித்து, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் 2 நாள்கள் பிரசாரம் செய்கிறாா்.

இது குறித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸை ஆதரித்து 2 நாள்கள் பிரசாரம் செய்கிறேன். மாா்ச் 30 ஆம் தேதி மாலை 4 மணிக்கு குட்டம் ஊராட்சி பெரியதாழை, கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தன்குழி, இடிந்தகரை பகுதியிலும், ஏப்.1 ஆம் தேதி மாலையில் திசையன்விளை பேரூராட்சி,இடையன்குடி, முதுமொத்தன்மொழி, குமாரபுரம், கோட்டைக்கருங்குளம், கஸ்தூரிரங்கபுரம், கூடன்குளம், ராதாபுரம், கள்ளிக்குளம் ஊராட்சிகளிலும் வாக்கு சேகரிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com