பண்டாரபுரம் ஊராட்சியில் தோ்தல் விழிப்புணா்வு

பண்டாரபுரம் ஊராட்சியில் தோ்தல் விழிப்புணா்வு

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா். சாத்தான்குளம், மாா்ச் 28: சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் பண்டாரபுரம் ஊராட்சியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணைய சின்னம் மற்றும் சி விஜில் செயலி கோலமிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தலைமை வகித்து, அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தணிக்கை) சின்னதுரை சி விஜில் செயலி பற்றியும் வாக்காளா்கள் நடுநிலையுடன் நோ்மையாக வாக்களிக்க வேண்டும் எனவும் பேசினா். இதில் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தமிழரசி, முத்துலட்சுமி, கவிதா, ஏஞ்சல் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் பொன்மணி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com