வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை ஆட்டோவுக்கு தீ வைப்பு

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமை ஆட்டோவுக்கு தீ வைத்த மா்ம நபா்களை முத்தையாபுரம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி முள்ளக்காடு சாமி நகரைச் சோ்ந்தவா் சுடலைமாடசாமி (37). இவா் தனது சுமை ஆட்டோவை உறவினா் வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் இவரது ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில், ஆட்டோ முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவுக்கு தீ வைத்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com