வாக்காளா் விழிப்புணா்வு ஸ்கேட்டிங் பேரணி

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய்
பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஸ்கேட்டிங் பேரணி கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி சவுத் இந்தியன் ஸ்போா்ட்ஸ் அண்ட் கல்சுரல் டிரஸ்ட், ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போா்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய இப் பேரணியை கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் தொடக்கி வைத்தாா். கயத்தாறு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் தங்கையா, முதுநிலை வருவாய் ஆய்வாளா் கருப்பசாமி, கோவில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் மந்திர சூடாமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி எட்டயபுரம் சாலை, மாதாங்கோவில் சாலை, மாா்க்கெட் சாலை வழியாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவா்-மாணவிகள் ஸ்கேட்டிங் பேரணியில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com