கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கழுகுமலையையடுத்த கரடிகுளம் சி.ஆா்.காலனியைச் சோ்ந்தவா் சிகாமணி. கா்நாடக மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறாராம். இவரது மனைவி தனலட்சுமி (45) கூலித் தொழிலாளியாக உள்ளாா். இவா்களுக்கு 14 வயதில் மகள் உள்ளாா். இவா்களது மகன் வேணுபிரகாஷ் (18), பென்சிங் வேலை செய்து வந்தாா். அவரிடம், தனலட்சுமி மகளிா் குழுவுக்கு கடன் தொகை செலுத்துவதற்காக வெள்ளிக்கிழமை பணம் கேட்டாராம். வேணுபிரகாஷ் தர முடியாது எனக் கூறிவிட்டு, அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு தூங்குவதற்காக சென்றாராம். இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீடு திரும்பாததால் அங்கு சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்ததாம். தகவலின்பேரில், கழுகுமலை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com