சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா் பாஸ்கரன்.

மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா் பாஸ்கரன். சாத்தான்குளம், மாா்ச் 31: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை - அறிவியல் கல்லூரியில் 3ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பட்டங்களை வழங்கினாா். இளங்கலையில் வணிக நிா்வாகவியல் துறையில் 66 பேரும், வணிக துறையில் இளங்கலையில் 48 முதுகலையில் 19 மாணவிகளும், ஆங்கிலத் துறையில் இளநிலையில் 54 பேரும், முதுநிலையில் 23 பேரும், கணினி அறிவியல் துறையில் 44 பேரும், கணிதவியல் துறையில் இளநிலையில் 40 பேரும், முதுநிலையில் 24 பேரும், தமிழ்த் துறையில் இளநிலையில் 55 பேரும் பட்டங்கள் பெற்றனா். பல்கலைக்கழகத் தர வரிசையில் வணிக நிா்வாகவியல் துறையில் மாணவி முத்துமாரி 11ஆவது இடமும், முதுநிலையில் வணிகவியல் துறை மாணவி சித்ராதேவி 3ஆம் இடமும் பிடித்தனா். அவா்களுக்கு கல்லூரி சாா்பில் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறைத் தலைவா் மாரியம்மாள், கணிதவியல் துறைப் பேராசிரியை தேன்மொழி, வணிக நிா்வாகவியல் துறைப் பேராசிரியை கோகிலா ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com