சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

சாகுபுரம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து அா்ச்சிப்பு விழா, மே தின சிறப்பு திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புனித நீரால் ஆலயத்தை அா்ச்சிப்பு செய்தாா்.

பின்னா், மே தினத்தையொட்டி தொழிலாளா்கள் நலன் கருதி இவோன் அம்புரோஸ், தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரொலிங்டன் அடிகளாா், ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியாா் ஆலயப் பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளாா் இணைந்து சிறப்பு திருப்பலி நடத்தினா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

இதில், திரளான கிறிஸ்தவா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com