தூத்துக்குடியில் பைக் எரிப்பு: சிறுவன், இளைஞா் கைது

தூத்துக்குடியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை எரித்ததாக சிறுவன் உள்ளிட்ட இருவரை தென்பாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, இந்திரா நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் மோஹித் (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஜவஹா் மகன் ஆகாஷ் (20) என்பவரிடம் கடன் வாங்கியிருந்தாராம். அதைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவா்களிடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் தனது நண்பருடன் மோஹித் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று, வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை எரித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆகாஷையும், 17 வயது சிறுவனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com