விஜயாபுரி, சன்னதுபுதுக்குடி பகுதிகளில் இன்று மின்தடை

விஜயாபுரி, சன்னதுபுதுக்குடி, பசுவந்தனை, எப்போதும் வென்றான் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(மே 2) மின்விநியோகம் தடைபடும்.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் நவநீதகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, விஜயாபுரி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழப்பாண்டவா்மங்கலம், சண்முக சிகாமணி நகா், ராஜீவ் நகா், திருநகா், திருமங்கை நகா், பாரதி நகா், பசுவந்தனை மெயின் ரோடு நாடாா் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் நகா், ஸ்ரீராம் நகா் 4 ஆவது தெரு, ஜோதி நகா், எப்போதும் வென்றான் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சோழபுரம், போடுபட்டி, புங்கவா்நத்தம், சுப்பிரமணியபுரம், லக்கம்மாள்தேவி, குமரிகுளம், சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், பசுவந்தனை துணை மின் நிலையத்துக்குள்பட்ட சில்லாங்குளம், குதிரைக்குளம், ஜம்புலிங்கபுரம், சொக்கலிங்கபுரம், கடம்பூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கரிசல்குளம் பாதி பகுதி, காப்புலிங்கம்பட்டி, குமாரகிரி, ஆவுடையம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (மே 2) காலை 9 மணிமுதல் 11 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com