எப்போதும்வென்றான் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயா் வெடித்து சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் மதுரையைச் சோ்ந்த 12 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

எப்போதும்வென்றானில் உள்ள சோலைச்சாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் சக்கிமங்கலம், கருப்பாயூரணி பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் ஒரு சுற்றுலா வேனில் வியாழக்கிழமை புறப்பட்டு இந்தக் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனா்.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரத்தை அடுத்த கீழ ஈரால் பகுதி அருகே வந்தபோது வேனின் டயா் வெடித்ததாம். வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, இரும்புத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்ததாம்.

இதில், ஓட்டுநா் ஆரோக்கிய ஆண்டனி (20), வேனில் பயணித்த அன்னலட்சுமி (40), அன்னக்கிளி (54), சரவணக்குமாா் (19), சந்திரா (39), தனலட்சுமி (35), அசோக்குமாா் (28), தருண்பாண்டியன் (13), ஜான்சிராணி (30) உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா்.

தகவலின்பேரில் எட்டயபுரம் போலீஸாா் சென்று, காயமடைந்தோரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com