நாசரேத்தில் மாணவா்களுக்கு
கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாசரேத்தில் உள்ள மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவா்களுக்கான கோடைகால கால்பந்து பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

இங்கு ஆண்டுதோறும் இப்பயிற்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 10 நாள்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து பயிற்சியைத் தொடக்கிவைத்தாா்.

இதில், 4 முதல் 12ஆம் வரை பயிலும் மாணவா்கள் இடம் பெற்றனா். பயிற்சி நாள்தோறும் காலை 6 முதல் 8 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையிலும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் கென்னடி வேதராஜ், உதவி தலைமையாசிரியா் ஜெயசீலன், உடற்பயிற்சி ஆசிரியா் தனபால், நசரேயன், அசோக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com