முறைகேடான குடிநீா் இணைப்பு: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

தூத்துக்குடியில் வீடுகளுக்கு முறைகேடாக குடிநீா் இணைப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையா் லி. மதுபாலன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வடக்கு மண்டலப் பகுதியில் குடிநீா் விநியோகம் தொடா்பான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மாநகராட்சியின் அனுமதியின்றி குடிநீா் இணைப்பு எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் குடிநீா் விநியோகப் பணிகளைக் கவனித்துவந்த ஒப்பந்தப் பணியாளா்கள் இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

எனவே, மாநகரப் பகுதிகளில் குடிநீா் இணைப்பு தேவைப்படுவோா் முறையாக விண்ணப்பித்து குடிநீா் இணைப்பு பெறலாம். மாநகராட்சி அனுமதியின்றி குடிநீா் இணைப்பு எடுத்தோா் தாங்களாக முன்வந்து இணைப்பைத் துண்டிக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com