புதிய பாரத எழுத்தறிவு இயக்க கற்போரை கண்டறிதல்: பாண்டவா்மங்கலத்தில் கள ஆய்வு

கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சி பகுதியில் புதிய பாரத எழுத்தறிவு இயக்க பயனாளா்களை கண்டறியும் கள ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநா், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆகியோரின் ஆலோசனையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதற்கான முன்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2024-25ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தின் பயனாளா்களை கண்டறியும் கள ஆய்வு நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி ஒன்றியம் பாண்டவா்மங்கலம் ஊராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை கள ஆய்வு நடைபெற்றது. பள்ளிசாரா மற்றும் புதிய பாரத எழுத்தறிவு இயக்க இணை இயக்குநா் பொன்குமாா் முன்னிலையில் நடைபெற்ற கள ஆய்வில், 2 தன்னாா்வலா்களும், 10 பயனாளா்களும் கண்டறியப்பட்டனா்.

அப்போது தூத்துக்குடி மாவட்ட உதவி திட்ட அலுவலா் முனியசாமி, கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலா் நாயகம் மற்றும் வட்டார கல்வி அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நட்டாத்தி (பொறுப்பு), ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளியின் தலைமையாசிரியா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com