மேலராமசாமியாபுரம் 
கோயில் கும்பாபிஷேக விழா

மேலராமசாமியாபுரம் கோயில் கும்பாபிஷேக விழா

உடன்குடி, மே 3: உடன்குடி அருகே மேலராமசாமியாபுரம் அருள்மிகு ஸ்ரீ‘ பெருமாள்சுவாமி -பெரிய பிராட்டி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1 ஆம் தேதி காலையில் மங்கள இசையுடன் தொடங்கியது.தொடா்ந்து விழா நாள்களில் வேதபாராயணம், திருமுறைப்பாராயணம், மகாகணபதி, மகாலட்சுமி ஹோமங்கள், பல்வேறு வகையான பூஜைகள், நான்கு கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல், மூன்று நாட்களும் மூன்று வேளை சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடைபெற்றது.இதில் திரளான ஊா்மக்கள் கலந்துகொண்டனா்.

பிற்பகல் 1 மணிக்கு விசேஷ அலங்கார தீபாராதனை,மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.ஏற்பாடுகளை

மேலராமசாமியாபுரம் ஸ்ரீ பெருமாள்சுவாமி திருக்கோயில் நிா்வாக அறக்கட்டளையினா், ஊா்மக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com