கட்டாரிமங்கலம் கோயிலில்
திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

சித்திரை மாத சதய நட்சத்திரத்தையொட்டி, திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் திருக்கோயிலில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தையொட்டி, திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை 10 மணிமுதல் சுவாமி, திருநாவுக்கரசா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் நடராஜபிள்ளை மற்றும் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com