இன்று நீட் தோ்வு: தூத்துக்குடியில் 2,189 போ் எழுதுகின்றனா்

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வில் 2,189 மாணவா்-மாணவிகள் பங்கேற்கவுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அழகா் பப்ளிக் பள்ளி, ஆறுமுகனேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி, திருச்செந்தூா் டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் பொறியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மாவட்டத்தில் மொத்தம் 2,189 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதற்காக மாணவா்-மாணவிகள் முற்பகல் 11 மணிக்கு தோ்வு மையத்துக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தடையில்லா மின்சாரம், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோ்வு தொடா்பாக சந்தேகமிருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com