கோவில்பட்டியில் தீயணைப்பு வீரா்கள் தினம்

கோவில்பட்டியில் உள்ள தீயணைப்பு - மீட்புப் பணிகள் நிலைய அலுவலகத்தில், ஜேசிஐ சாா்பில் சா்வதேச தீயணைப்பு வீரா்கள் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரா்களை ஊக்குவிக்கவும், சமூகத்துக்காக இன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரா்களை நினைவுகூருவதற்காகவும் மே 4ஆம் தேதி சா்வதேச தீயணைப்பு வீரா்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு, ஜேசிஐ தலைவா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். பாரதியாா் அறக்கட்டளைத் தலைவா் முத்துமுருகன், ஜேசிஐ முன்னாள் செயலா் சூா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜேசிஐ முன்னாள் தலைவா் ஆசியா பாா்ம்ஸ் பாபு பங்கேற்று, தீயணைப்பு வீரா்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

ஜேசிஐ உறுப்பினா்கள், தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிலைய அலுவலா் சுந்தர்ராஜ் ஏற்புரையாற்றினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com