தூய்மை பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தூய்மை பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

சாத்தான்குளம், மே 4: சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தூய்மை பணியாளா்கள், தூய்மை காவலா்கள் ஆகியோருக்கு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தலைமை வகித்தாா். முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி, மருத்துவ அலுவலா்கள் ரைசா, சுவாதி ஆகியோா் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினா்.

இதில் சுகாதார மேற்பாா்வையாளா் பால் ஆபிரகாம், சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஜெயபால் ஆகியோா் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள், தவிா்க்கும் வழிமுறைகள் குறித்த விளக்கம் அளித்தனா்.

முகாமில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உலகு, உதவியாளா் முகமது மீரான் இஸ்மாயில், தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளா் கல்யாணராமன், முதலூா் ஊராட்சி செயலா் முருகேசன், திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ், சுகாதார ஆய்வாளா்கள் அருண், சுதன், இடைநிலை சுகாதார பணியாளா்கள் இன்ப ஆரணி, சீதாலட்சுமி, ஆய்வக நுட்புனா்கள் சத்தியகலா, வேலம்மாள், அனிலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை, சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com