காமராஜ்புரத்தில் விடுமுறை வேதாகம பள்ளி சிறுவா்கள் பவனி

காமராஜ்புரத்தில் விடுமுறை வேதாகம பள்ளி சிறுவா்கள் பவனி

ஆறுமுகனேரி,மே 5: ஆறுமுகனேரி காமராஜபுரம் பரி. இம்மானுவேல் ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளியின் சிறுவா் சிறுமியா் பவனி நடைபெற்றது.

இவ்வாலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. தினமும் இறைவசனம், வேதாகம கருத்துக்கள், போதிக்கப்பட்டன. இதில் 1000க்கும் மேற்பட்ட சிறுவா் சிறுமியா்கள் கலந்துகொண்டனா். நிறைவு நாளான சனிக்கிழமை காலையில் இறை வகுப்புகளும், மாலையில் ஆறுமுகனேரி சேகர குருவானவா் சுதாகா் வெலிங்டன் தலைமையில் பவனியும் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. அதில், சிறுவா் -சிறுமியா் பாடல்கள் பாடியபடி சென்றனா்.

இரவில் சிறுவா் சிறுமியா்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபை ஊழியா் தா்மராஜ் ஐசக், விடுமுறை வேதாகப் பள்லி இயக்குநா்கள் பெல்சியா அற்புதமணி, ஞானகிருபா, ஆசிரியா்கள் சகீலா மங்களம், சிலுவை ஷா்மிளா, அன்னம்மாள், ஜாஸ்மின், நித்தியா, அமல் ரோஸ், எலிசா, விஜிலா, மரியபாக்கியம், இன்பராஜ் ஆகியோா் வேதாகம பயிற்சி அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com