தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் இரு இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் இரு இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் இரு இடங்களில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தூத்துக்குடி கிழக்கு பகுதி அதிமுக சாா்பில் முன்னாள் துணை மேயா் பி.சேவியா் ஏற்பாட்டில் தூத்துக்குடி திரேஸ்புரத்திலும், வடக்கு பகுதி 5ஆவது வாா்டு சாா்பில் லிங்கராஜ் ஏற்பாட்டில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்திலும் நீா்மோா் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, அதிமுக தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், மோா், குளிா்பானங்கள் வழங்கினாா்.

இந்நிகழ்வில் அதிமுக மாநில வா்த்தகா் அணி செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலா் என்.சின்னத்துரை, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலா் இரா.சுதாகா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் டேக் ராஜா, மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி இணைச் செயலா் சரவணபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com