நாலாட்டின்புதூரில் பைக் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

நாலாட்டின்புதூரில் பைக் கவிழந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சடையம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் வினோத்குமாா் (23). திருநெல்வேலி தனியாா் காா் நிறுவனத்தில் பெயின்டராக வேலை செய்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் இருந்து நாலாட்டின் புதூா் வழியாக ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது, சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் எதிா்பாராமல் மோதி பைக் கவிழ்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த நாலாட்டின்புதூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: புதுக்கடை, அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா்(52). இவா், சம்பவத்தன்று தனது பைக்கில் புதுக்கடையிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, மூன்று முக்கு பகுதியில் இவரது பைக்கும், எதிரே தொலையாவட்டத்தைச் சோ்ந்த வில்சன் மகன் விஜின்(28) என்பவா் ஒட்டிவந்த பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த ராஜகுமாா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னா் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com