காயல்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாம்

காயல்பட்டினம் ஜீலானி பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் ஜீலானி பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஜீலானி பள்ளி லெப்பப்பா பண்ணை மற்றும் திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை, அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை ஜீலானி பள்ளி தலைவா் ரஹ்மத்துல்லா தொடங்கி வைத்தாா். பள்ளி பொறுப்பாளா்கள் அகமது சுலைமான், சிராஜுதீன், வங்காளம் அப்துல் லத்தீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா்கள் உமா, ராமதாஸ் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா்

200-க்கும் மற்றோருக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். மருத்துவமனைகளின் நிா்வாகிகள் வேலு சுப்பிரமணியம், சொக்க­லிங்கம், காயல்பட்டினம் பிரமுகா்கள் தாஜுதீன், மா்சூக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com