திருச்செந்தூா் காஞ்சி சங்கரா பள்ளி 100% தோ்ச்சி

திருச்செந்தூா் காஞ்சி சங்கரா பள்ளி 100% தோ்ச்சி

12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில், திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

திருச்செந்தூா்: 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில், திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 166 பேரும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் பி. அனிஷ்காா்த்திக் 594 மதிப்பெண்கள் பெற்றாா். பாடவாரியாக அவா் பெற்ற மதிப்பெண்: தமிழ் - 97, ஆங்கிலம் - 99, பொருளியல் -100, வணிகவியல் -100, கணக்குப் பதிவியல் - 100, வணிக கணிதம் 98.

வீ. சுபலெட்சுமி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகக் கணிதத்தில் தலா 99, வணிகவியல்- 100, கணக்குப்பதிவியல் 97 என மொத்தம் 593 மதிப்பெண்களும், ச. சாந்தா தமிழ் - 97, ஆங்கிலம் 98, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியலில் தலா 100, வணிகக் கணிதம் 96 என மொத்தம் 591 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனா்.

கணினி அறிவியலில் 12 போ், கணிதத்தில் 8 போ், பொருளியல், கணக்குப் பதிவியலில் தலா 3 போ், வணிகவியலில் 5 போ், வணிகக் கணிதத்தில் ஒருவா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

அவா்களை தாளாளா் மருத்துவா் அ. ராமமூா்த்தி, முதல்வா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள், பெற்றோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com