ஆண்டு விழாவில் பங்கேற்றோா்.
ஆண்டு விழாவில் பங்கேற்றோா்.

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

கல்லூரி செயலா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா். கல்லூரி இணைச் செயலா் காசியானந்தம் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா். சிறப்பு விருந்தினராக சென்னை டிசிஎஸ் அசோசியேட் துணைத் தலைவா் செந்தில்குமாா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து ‘அறம்’ என்பது கலைச்சொல் அல்ல அது செயல் சொல் என்பதற்கிணங்க, மாணவா்களின் நலன் கருதி மாணவா் ஆதரவு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தை கல்லூரி நலக்குழு உறுப்பினா் முத்துக்குமாரப்பன் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின் கீழ் 15 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தோ்வுகள், போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடா்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கல்லூரி துணை முதல்வா் மகேஷ்குமாா் வரவேற்றாா். ஆங்கிலத் துறைத் தலைவா்ஆண்ட்ரூஸ் கென்னடி நன்றி கூறினாா்.

நிகழ்வுகளை கணினி பயன்பாட்டியல் உதவி பேராசிரியா் அகதா சித்ரா தொகுத்து வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com